உள்ளூர் செய்திகள்
அண்ணா பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Published On 2022-05-05 09:44 GMT   |   Update On 2022-05-05 09:44 GMT
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் : அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
நாகர்கோவில்:

நாகர்கோவில் மாநகரில் பொதுமக்களுக்கு இடையூறாக நடைபாதையில் கடைகள் அமைக்கக்கூடாது என்று மேயர் மகேஷ் அறிவுறுத்தி உள்ளார். 

மேலும் வடசேரி மற்றும் அண்ணா பஸ் நிலையங்களில் உள்ள நடைபாதையை ஆக்கிரமித்து பொருட்களை வைக்கக்கூடாது என்றும் கடைக்காரர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனால் பல்வேறு கடைக்கா ரர்கள் பஸ் நிலையத்தில் நடைபாதையை ஆக்கிரமித்து பொருட்களை வைத்துள்ளனர்.

கடை விளம்பர பலகைகளும் நடைபாதையிலேயே வைக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இந்த நிலையில் சுகாதார ஆய்வாளர் ராஜா தலைமையிலான அதிகாரிகள் நேற்று காலை அண்ணா பஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பல்வேறு கடைக்காரர்கள் நடை பாதையை ஆக்கிரமித்து பொருட்களை வைத்திருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து நடைபாதை ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர். 

அந்த வகையில் மொத்தம் 15 கடைகளில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. மீண்டும் நடைபாதையை ஆக்கிரமித்து பொருட்களை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சம்பந்தப்பட்ட கடைக்காரர்களை அதிகாரிகள் எச்சரித்தனர்.
Tags:    

Similar News