செய்திகள்
முககவசம்

முககவசம் விற்பனை மீண்டும் அமோகம்

Published On 2021-06-07 06:59 GMT   |   Update On 2021-06-07 06:59 GMT
கொரோனா ஊரடங்கில் இன்று முதல் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் , பாதுகாப்புக்காக முககவசம் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
திருப்பூர்:

கொரோனா முதல் அலை ஏற்பட்ட போது திருப்பூரை பொறுத்த வரை ஆரம்பத்தில் தட்டுப்பாடாக இருந்த முக கவசம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.அதே சமயம் திருப்பூர் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் முக கவசம் உற்பத்தியை துவங்கின.

கொரோனா என்ற கொடிய நோய் உலகையே ஆட்டி படைத்த நேரம்.  அதிலிருந்து மக்களை பாதுகாக்கும் முக கவச உற்பத்தியை திருப்பூர் துவக்கியது.நோயுடன் போராடிய நிலையிலும்  நோய் எதிர்ப்புக்கான  பொருட்களையும்  உற்பத்தி செய்து பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டது.தொடர்ந்து இதன் விற்பனை நடைபாதை கடை வரை வந்தது.

தற்போது இரண்டாவது அலை பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இன்று முதல் சில தளர்வுகள்அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காய்கறி, மளிகை பொருட்கள் வாங்க பொதுமக்கள் வெளியே வர ஆரம்பித்துள்ளனர். தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால்   பெரும்பாலான   பொதுமக்கள் ஒரு முறை பயன்படுத்தும் முககவசங்களை  வாங்க தொடங்கியுள்ளனர்.

இதனால் மருந்து கடைகளில் மட்டுமே விற்பனையாகி வந்த ஒருமுறை பயன்படுத்தும் முக கவசம் தற்போது சாலையிலும்  விற்பனைக்கு வந்து விட்டது.தற்போது 3 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகிறது. இது 50 மற்றும் 100 எண்ணிக்கை கொண்ட பாக்கெட்களாக விற்பனையாகிறது. இதன் தேவை அதிகரித்து வரும் நிலையில் பலரும் இதனை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
Tags:    

Similar News