ஆன்மிகம்
திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான நேற்று இரவு ஏழுமலையான் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.

பிரம்மோற்சவ விழா நிறைவு: திருப்பதியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி

Published On 2021-10-15 09:02 GMT   |   Update On 2021-10-15 09:02 GMT
கொரோனா விதிமுறையால் திருப்பதி கோவில் வளாகத்தில் கல்யாண மண்டபம் அருகே தொட்டியில் தண்ணீர் நிரப்பி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடத்தப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கி நடந்து வந்தது. காலை மாலை என இருவேளையும் ஏழுமலையான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக 2-வது ஆண்டாக பக்தர்கள் இன்றி பிரம்மோற்சவ விழா நடந்தது.

நேற்று காலை சர்வ பூபால வாகனத்தில் ஏழுமலையான் அருள்பாலித்தார்.

நேற்று இரவு குதிரை வாகன சேவை நடந்தது. இதில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ரமணா, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, முதன்மை செயலர் ஜவஹர் ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இன்று அதிகாலை திருச்சி உற்சவம் மற்றும் பட்ன திருமஞ்சனம் நடந்தது. அதைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. சக்கரத்தாழ்வார் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோவில் வளாகத்தில் உள்ள தொட்டியில் தண்ணீர் நிரப்பி தீர்த்தவாரி நடந்தது.

வழக்கமாக கோவில் தெப்பத்தில் தீர்த்தவாரி நடக்கும். கொரோனா விதிமுறையால் கோவில் வளாகத்தில் கல்யாண மண்டபம் அருகே தொட்டியில் தண்ணீர் நிரப்பி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடத்தப்பட்டது.

இதையடுத்து கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெற்றது.

திருப்பதியில் நேற்று 28,163 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 10,942 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.2 கோடி உண்டியலில் காணிக்கை வசூலானது.
Tags:    

Similar News