செய்திகள்
கோப்புப்படம்

சில்லறை பணவீக்கம் மே மாதத்தில் 6.3 சதவீதமாக உயர்வு

Published On 2021-06-14 13:56 GMT   |   Update On 2021-06-14 13:56 GMT
ஏப்ரல் மாதம் 4.23 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்கம், மே மாதத்தில் 6.36 சதவீதமாக அதிகரித்துள்ளது என தேசிய புள்ளிவிவர அலுவலகம் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சில்லறை பணவீக்கம் கடந்த ஏப்ரல் மாதத்தைவிட மே மாதத்தில் 1.96 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 4.23 சதவீதமாக இருந்தது. இது மே மாதத்தில் 6.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் பணவியல் கொள்கை, முக்கியமான வட்டி விகிதம் உயர்த்தப்படாததுதான் காரணம் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

சில்லறை பணவீக்கம் என்பது நாம் கடந்த ஆண்டு ஒரு பொருளை 100 ரூபாய்க்கு வாங்கியிருந்த நிலையில், அந்த பொருளை தற்போது 110 ரூபாய்க்கு வாங்கினால் அது சில்லறை பணவீக்கம். வருமானம் அதிகரிக்காமல் சில்லறை பணவீக்கம் அதிகரித்தால் பொருட்கள் வாங்குவதில் சிரமம் ஏற்படும்.

ஆர்பிஐ நுகர்வோர் விலை குறியீட்டு எண் 2021-22 நிதியாண்டில் 5.1 சதவீதமும், முதல் காலாண்டில் 5.2 சதவீதமும், 2-வது காலாண்டில் 5.4 சதவீதமும், 3-வது காலாண்டில் 4.7 சதவீதமும், 4-வது காலாண்டில் 5.3 சதவீதமும் இருக்கும் என திட்டமிட்டுள்ளது. தற்போது 6.3 சதவீதமாக உயர்ந்துள்ளதால், அதற்குள் நிற்குமா? என்பது சந்தேகம்தான்.

2020 ஜனவரியில் சில்லறை பணவீக்கம் 7.59 சதவீதமாக இருந்ததது. 2019 டிசம்பரில் இது 7.35 சதவீதமாக இருந்தது. 

எரிபொருள் மற்றும் உணவு ஆகியவற்றின் விலை உயர்வே இதற்கு காரணமாகும். 2014 மே மாதத்தில் அதிகபட்சமாக 8.3 சதவீதமாக பணவீக்கம் இருந்தது.
Tags:    

Similar News