ஆட்டோமொபைல்

விரைவில் வெளியாகும் டொயோட்டா எடியோஸ் ஃபேஸ்லிஃப்ட்?

Published On 2018-02-18 10:44 GMT   |   Update On 2018-02-18 10:44 GMT
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் எடியோஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் விரைவில் வெளியாக இருக்கிறது.
புதுடெல்லி:

இந்தியாவில் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் மூன்று புதிய வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. ஏற்கனவே டொயோட்டா யாரிஸ் பிரீமியம் செடான் மாடலை அறிமுகம் செய்த நிலையில், டொயோட்டா எடியோஸ் பிளாட்டினம் மற்றும் எடியோஸ் லிவா ஃபேஸ்லிஃப்ட் மாடல்களை விரைவில் வெளியாக இருக்கிறது. 

எடியோஸ் செடான் 2010-ம் ஆண்டு வெளியிடப்பட்டு அதன் பின் எடியோஸ் லிவா 2011-ம் ஆண்டு அறிமுகமானது. இதன் முதல் ஃபேஸ்லிஃப்ட் மாடல் 2014-ம் ஆண்டிலும், இரண்டாவது ஃபேஸ்லிஃப்ட் மாடல் 2017-ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அந்த வகையில் எடியோஸ் மூன்றாவது ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியாக இருக்கிறது.

மேம்படுத்தப்பட்ட மற்றும் தற்போதைய சூழலுக்கு ஏற்ற வகையில் புதிய எடியோஸ் மாடல் வெளியிடப்படும் என டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவன துணை தலைவர் சேகர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். எடியோஸ் மற்றும் லிவா மாடல்களை போன்று சாதாரண ஃபேஸ்லிஃப்ட் மற்றும் சில மாற்றங்கள் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.



முதற்கட்டமாக புதிய யாரிஸ் மாடலில் அதிக கவனம் செலுத்துவதால், எடியோஸ் பிளாட்டினம் மற்றும் எடியோஸ் லிவா மாடல்கள் இந்த ஆண்டின் பிற்பாதியில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா யாரிஸ் மாடலில் போட்டி நிறுவன வாகனங்களில் இல்லாத மற்றும் சந்தையின் முதல் முறை அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஹூன்டாய் கிரெட்டா மாடலுக்கு போட்டியாக உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்ட சிறிய எஸ்.யு.வி. மாடலை வெளியிட டொயோட்டா திட்டமிட்டு வருகிறது. டொயோட்டா தரம் மற்றும் சிறப்பான அம்சங்கள் சந்தையில் எடியோஸ் சீரிஸ் வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்திருந்தன. 

அந்த வகையில் டொயோட்டாவின் மூன்றாவது ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் பல்வேறு அம்சங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மெக்கானிக்கல் அம்சங்களில் சிறப்பானதாக இருந்தாலும் கூட குறைவான உதிரி பாகங்கள் புதிய வாடிக்கையாளர்களை கவர மறுக்கிறது.
Tags:    

Similar News