உள்ளூர் செய்திகள்
கைது

தஞ்சையில் ரூ.75 லட்சம் மதிப்புள்ள கஞ்சா மூட்டைகள் கடத்தி வந்த 3 பேர் கைது

Published On 2021-12-08 10:20 GMT   |   Update On 2021-12-08 10:20 GMT
கர்நாடகாவில் இருந்து தஞ்சாவூருக்கு கண்டெய்னர் மூலம் தடைசெய்யப்பட்ட சுமார் 1700 கிலோ மதிப்புமிக்க குட்காவை கடத்தி வருவதாக போலீசாருக்கு கிடைத்த தகவல் கிடைத்தது.
தஞ்சை:

தஞ்சாவூர் சரகம் காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ் குமார் உத்தரவின்பேரில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் மேற்பார்வையில் மகேந்திரன், கந்தசாமி, கண்ணன், இளையராஜா, சுந்தர்ராமன்,  ஆகியோர் அடங்கிய  தனிப்படையினர் வாகன கோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கர்நாடகாவில் இருந்து தஞ்சாவூருக்கு கண்டெய்னர் மூலம் தடைசெய்யப்பட்ட சுமார் 1700 கிலோ மதிப்புமிக்க குட்காவை கடத்தி வருவதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவ்வழியே வந்த கண்டெய்னர் லாரி மற்றும் காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது அதில் கஞ்சா மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. தனிப்படையினர் கஞ்சா கடத்தி வந்த ராஜேஷ்(எ)ராஜ்குமார், அசோக் மற்றும் சேலத்தை சேர்ந்த ஆனந்த், ஆகியோரை கைது செய்து ரூ.75 லட்சம் மதிப்புள்ள கஞ்சா மூட்டைகளையும், வாகனங்களையும் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  

துரிதமாக செயல்பட்ட தஞ்சாவூர் சரக  தனிப்படையினரை காவல்துறை அதிகாரிகள் பாராட்டினர்.
Tags:    

Similar News