செய்திகள்
வெற்றி வாகை சூடிய நீரஜ் சோப்ரா

'தங்க மகன்' நீரஜ் சோப்ரா... இது சாதனையல்ல... வரலாறு

Published On 2021-08-07 12:26 GMT   |   Update On 2021-08-07 13:17 GMT
ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவுக்கு கடைசியாக தனி நபர் பிரிவில் 2008 ஆம் ஆண்டு தங்கப்பதக்கம் கிடைத்தது.
புதுடெல்லி:

இந்தியாவின் தடகள வீரரான நீரஜ் சோப்ரா, இன்று ஒலிம்பிக்கின் ஈட்டி எறிதல் போட்டியில் 87.58 மீட்டர் எறிந்தபோது ஒரு மகத்தான சாதனை படைக்கப்பட்டது. 1896 ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் ஒரு தனி நபர் கூட தடகளத்தில் தங்கப் பதக்கம் வென்றதில்லை. அந்த வரலாற்றை மாற்றி எழுதி 'தங்க மகனாக' உருவெடுத்திருக்கிறார் நீரஜ் சோப்ரா. 

கடைசியாக இந்தியா சார்பில் தடகளப் போட்டியில் வெள்ளி வென்றவரின் பெயர் நார்மன் பிரிட்சார்ட். பதக்கம் வென்ற ஆண்டு 1900. ஆண்களுக்கான 200 மீட்டர் தடகளப் போட்டியில் அவர் இந்த மகத்தான சாதனையைப் படைத்தார். 



அதன் பிறகு நாம் ஆடவர் ஹாக்கி போட்டியில் 8 முறை தங்கம் வென்றுள்ளோம். கடைசியாக நமக்கு கிடைத்த தனி நபர் தங்கப் பதக்கமானது 2008 ஆம் ஆண்டு வந்தது. அப்போது சீனாவின் பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 10 மீட்டர் ரைஃபில் போட்டியில் தங்கம் வென்றார் அபினவ் பிந்த்ரா. அதையடுத்து, 13 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தங்கம் வென்றுள்ளது இந்தியா. இன்னும் 100 ஆண்டுகள் அல்ல, அதையும் தாண்டி இந்த சாதனை பேசப்படும். 

நீரஜ் சோப்ரா தனக்குப் பின்னால் வந்த பல தலைமுறையினர் பதக்கங்களைக் குவிக்க உத்வேகமாகவும் முன்னுதாரணமாகவும் இருந்தார் என்று வரலாறு எழுதும்.
Tags:    

Similar News