தொழில்நுட்பம்
Mi தீபாவளி

பண்டிகை கால விற்பனையில் அசத்திய சியோமி

Published On 2019-10-31 09:19 GMT   |   Update On 2019-10-31 09:19 GMT
சியோமி நிறுவனம் இந்தியாவில் பண்டிகை காலத்தில் நடைபெற்ற சிறப்பு விற்பனைக்கு அமோக வரவேற்பு கிடைத்ததாக தெரிவித்துள்ளது.



இந்தியாவில் பண்டிகை கால விற்பனையின் போது சியோமி நிறுவனம் 1.2 கோடி சாதனங்களை விற்றதாக தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 40 சதவகிதிம் அதிகம் ஆகும். கடந்த ஆண்டு சியோமி நிறுவனம் 85 லட்சம் சாதனங்களை விற்பனை செய்தது.

இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் சியோமி நிறுவனம் மொத்தம் 85 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 37 சதவிகிதம் அதிகம் ஆகும். இந்திய சந்தையில் ஒரு மாத காலத்தில் வேறு எந்த நிறுவனமும் இத்தனை ஸ்மார்ட்போன்களை இதுவரை விற்றதில்லை என சியோமி தெரிவித்துள்ளது.

அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்களில் ரெட்மி நோட் 7எஸ் மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ மாடல்கள் முன்னணி்யில் இருந்தது. அமேசான் இந்தியா தளத்தின் பட்ஜெட் போன் பிரிவில் ரெட்மி 7 மற்றும் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன்கள் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.



ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து சியோமி நிறுவனம் மொத்தம் ஆறு லட்சத்திற்கும் அதிக Mi டி.வி.க்களை விற்பனை செய்திருக்கிறது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 48 சதவிகிதம் அதிகம் ஆகும். ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களில் அதிகம் விற்பனையான டி.வி. மாடல்களில் Mi டி.வி. இருக்கிறது.

இத்துடன் Mi சாதனங்கள் பிரிவில் மொத்தம் முப்பது லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அணியக்கூடிய சாதனங்கள் பிரிவில் Mi பேன்ட் அதிகம் விற்பனையாகி இருக்கிறது. இதைத் தொடர்ந்து Mi பவர் பேங்க், Mi ஏர் பியூரிஃபையர் 2எஸ் உள்ளிட்டவை அதிகம் விற்பனையாகின.
Tags:    

Similar News