ஆட்டோமொபைல்
ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஊழியர்களுக்கு அசத்தலான தீபாவளி பரிசு வழங்கிய நிறுவனம்

Published On 2021-11-05 10:32 GMT   |   Update On 2021-11-05 10:32 GMT
சூர்த் நகரை மையமாக கொண்டு இயங்கும் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அசத்தலான தீபாவளி பரிசு வழங்கி இருக்கிறது.


இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு ஒருபக்கம், வட இந்தியாவில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சூரத்-ஐ சேர்ந்த அலையன்ஸ் குரூப் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அசத்தலான தீபாவளி பரிசை வழங்கி இருக்கிறது. 

பெட்ரோல் விலை உயர்வு மற்றும் காற்று மாசு அதிகரிப்பதை கருத்தில் கொண்டு இந்நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை தனது ஊழியர்களுக்கு பரிசாக வழங்கி இருக்கிறது. ஒகினவா நிறுவனத்தின் பிரைஸ் ப்ரோ மாடல் அந்நிறுநனத்தின் 35 ஊழியர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் விலை ரூ. 76,848 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். 



'பெட்ரோல் விலை உயர்வு மற்றும் இதர காரணங்களை கருத்தில் கொண்டு ஊழியர்களுக்கு எலெக்ட்ரிக் வாகனங்களை பரிசளிக்க திட்டமிட்டோம். இதன் மூலம் எரிபொருளுக்கான கட்டணம் குறைவதோடு, சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் நிறுவனமும் பங்கெடுக்க வாய்ப்பாக அமைந்துள்ளது,' என அலையன்ஸ் குரூப் இயக்குனர் சுபாஷ் தவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News