செய்திகள்
கேட்சை தவறவிட்ட டிராவிஸ் ஹெட்

ரஹானே சதம் அடிப்பதற்குமுன் ஐந்து முறை அவுட் செய்திருக்கனும்: மிட்செல் ஸ்டார்க் புலம்பல்

Published On 2020-12-27 11:10 GMT   |   Update On 2020-12-27 11:10 GMT
மெல்போர்ன் டெஸ்டில் ஆஸ்திரேலிய வீரர்கள் பல கேட்ச்களை விட்டதால், ரஹானே சதம் அடித்ததுடன் இந்தியா 2-வது நாள் முடிவில் 277 ரன்கள் அடித்துவிட்டது.
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் ரஹானே அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 104 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

ரஹானேவுக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் பல கேட்ச்களை விட்டு உதவி புரிந்தனர். நாங்கள் ரஹானேவை ஐந்து முறையாக அவுட் செய்திருக்கனும் என மிட்செல் ஸ்டார்க் கவலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மிட்செல் ஸ்டார்க் கூறுகையில் ‘‘ரஹானேயின் சதம் மிகவும் சிறப்பு. அவர் நெருக்கடியை உள்வாங்கிக் கொண்டு, இந்திய அணியின் ரன் குவிப்பிற்கு தலைமை தாங்கி இந்திய அணி என்ற கப்பலை நிலைநிறுதிக் கொண்டார். 

இங்கே (மெல்போர்ன்) சிறப்பாக பேட்டிங் செய்தார். அவர் எங்களுக்கு வாய்ப்புகளை வழங்கினார். அவர் சதம் அடிப்பதற்கு முன்பு ஐந்து முறை வாய்ப்புகள் வழங்கினார். அதில் மூன்று அல்லது நான்கு முறை அவுட் செய்திருக்கனும். ஆனால் ரன்அடிக்க வேண்டும் என் அதிர்ஷ்டம் அவருக்கு இருந்துள்ளது. அவருக்கு வாழ்த்துக்கள்’’ என்றார்.
Tags:    

Similar News