செய்திகள்
மலாலா

காஷ்மீர் குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு செல்ல உதவவேண்டும் - ஐ.நா.விடம் மலாலா வலியுறுத்தல்

Published On 2019-09-15 07:22 GMT   |   Update On 2019-09-15 07:58 GMT
காஷ்மீரில் குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு செல்ல ஐ.நா.சபை உதவ வேண்டும் என பாகிஸ்தான் ஆர்வலரும், நோபல் பரிசு பெற்றவருமான மலாலா இன்று உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
லண்டன்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் மற்றும் காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பும், ஆதரவும் தொடர்ந்து எழுந்து வருகிறது.

காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபோது பாதுகாப்பு காரணங்களுக்காக சில பகுதிகளில் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. 40 நாட்கள் கடந்த பிறகும் அங்கு நிலைமை சீராகவில்லை. பள்ளிகள் இன்னும் திறக்கவில்லை. பல்வேறு பகுதிகளில் இண்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காஷ்மீரில் குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு செல்ல ஐ.நா.சபை உதவ வேண்டும் என பாகிஸ்தான் ஆர்வலரும், நோபல் பரிசு பெற்றவருமான மலாலா இன்று உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

காஷ்மீரில் அமைதி நிலவ ஐக்கிய நாடுகள் சபை தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். காஷ்மீர் மக்களின் குரல்களை செவிமடுத்து கேட்க வேண்டும். மேலும், 40 நாட்களுக்கு மேலாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. எனவே காஷ்மீர் குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு பாதுகாப்பாக செல்லும் வகையில் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

Similar News