ஆன்மிகம்

ராவணனின் தம்பி விபீஷணன்

Published On 2019-06-25 04:07 GMT   |   Update On 2019-06-25 04:07 GMT
ராமாயண காலத்தில் இலங்கையை அரசாண்ட ராவணனின் தம்பி விபீஷணன். விபீஷணன் நீதி நியாயங்களை பின்பற்றி நடக்கும் பண்பு கொண்டவனாக இருந்தான்.
ராமாயண காலத்தில் இலங்கையை அரசாண்ட ராவணனின் தம்பி விபீஷணன். ராவணன் உலகையே தன்வசப்படுத்தி, ஆட்சி செய்யும் கொடுமை நிறைந்தவனாக இருந்தாலும், விபீஷணன் நீதி நியாயங்களை பின்பற்றி நடக்கும் பண்பு கொண்டவனாக இருந்தான்.

அவன் காட்டில் இருந்து சீதையை கடத்தி வந்து, அசோக வனத்தில் சிறை வைத்த ராவணனை கண்டித்தான். சீதையை மீண்டும் ராமனிடமே கொண்டு போய் சேர்த்து விடும்படி பல முறை மன்றாடினான். ஆனால் அவனது வார்த்தைக்கு ராவணன் கொஞ்சமும் மதிப்பளிக்கவில்லை.

அதனால் ராவணனுக்கு உதவ விரும்பாத விபீஷணன், ராமனிடம் சென்று அடைக்கலம் புகுந்தான். ராவணனுக்கும், ராமனுக்கும் நடந்த யுத்தத்தில் ராவணனோடு சேர்ந்து அவனோடு இருந்த அனைவரும் மாண்டனர். பின்னர் ராமன், இலங்கையின் அரசனாக விபீஷணனுக்கு முடி சூட்டினான்.

சீதை அசோக வனத்தில் சிறைபட்டிருந்தபோது, விபீஷணனின் மகள் திரிசடைதான், அவளுக்கு ஆறுதலாக இருந்தாள்.
Tags:    

Similar News