செய்திகள்
விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி பேசிய காட்சி

விஞ்ஞானிகளுக்கு நம்பிக்கையூட்டிய பிரதமர் மோடி

Published On 2019-09-06 21:48 GMT   |   Update On 2019-09-06 21:48 GMT
விக்ரம் லேண்டரில் இருந்து தகவல் வராத நிலையில் உங்களுடன் நான் இருக்கிறேன் முன்னேறிச் செல்லுங்கள் என இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி நம்பிக்கையூட்டினார்.
பெங்களூர்:

இஸ்ரோ சார்பில் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய ‘சந்திரயான்-2’ விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது.

‘சந்திரயான்-2’ விண்கல திட்டத்தின் முக்கிய மற்றும் சவாலான நிகழ்வு இன்று (சனிக்கிழமை) அதிகாலையில் நடந்தது. சந்திரயான்-2 விண்கலத்தின் ‘விக்ரம் லேண்டர்’ நிலவை நெருங்கியநிலையில் அதிலிருந்து சிக்னல் எதுவும் வரவில்லை.

இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவிக்கையில், “லேண்டரில் இருந்து கட்டுபாட்டு அறைக்கு சிக்னல் எதுவும் வரவில்லை. இந்த தரவுகளை ஆராய்ந்து வருகிறோம். நிலவிற்கு 2.1 கிலோ மிட்டர் தொலைவில் இருந்தபோது விக்ரம் லேண்டரில் தகவல் துண்டிக்கப்பட்டது. தகவல் தொடர்பு துண்டிப்பு குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்

இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பிரதமர் மோடி கூறியதாவது:-

இஸ்ரோ விஞ்ஞானி சிவன் உள்ளிட்டோரை தட்டிக் கொடுத்து நம்பிக்கையுடன் இருங்கள் நாம் சாதித்துள்ளது சிறிய விஷயம் அல்ல. வாழ்க்கை என்றால் மேடு பள்ளங்கள் இருக்கதான் செய்யும். நான் உங்களோடு இருக்கிறேன் தைரியமாக முன்னேறிச் செல்லுங்கள் எனவும் நம்பிக்கையுடனும் கடன உழைப்புடனும் நமது விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுவோம் எனவும் கூறினார்.

நாடு, அறிவியல், மக்களுக்கு பெரும் சேவையாற்றியுள்ளீர்கள் விஞ்ஞானிகளின் உழைப்பைக் கண்டு நாடு பெருமை அடைகிறது என விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.
Tags:    

Similar News