செய்திகள்
நிதின் கட்கரி

நல்ல சாலைகள் வேண்டுமென்றால் மக்கள் அதற்கான கட்டணம் செலுத்தவேண்டும் - நிதின் கட்கரி

Published On 2021-09-16 18:56 GMT   |   Update On 2021-09-16 18:56 GMT
நாட்டில் சிறந்த சாலை கட்டமைப்பு தேவையென்றால் மக்கள் அதற்கு பணம் செலுத்தத் தான் வேண்டும் என சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலை பணிகளை ஆய்வுசெய்த மத்திய சாலைப் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

திருமணத்துக்காக நீங்கள் ஏ.சி. மண்டபத்தைப் பயன்படுத்த விரும்பினால் அதற்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டும். இல்லையெனில், நீங்கள் வெளியிலும் திருமணத்தை ஏற்பாடு செய்யலாம். அதேபோல் தான் மக்களுக்கு நல்ல சாலைகள் வேண்டுமென்றால் அதற்கு அவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.

விரைவுச் சாலை பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கும், இதனால் எரிபொருள் செலவு குறையும். டெல்லி - மும்பை விரைவுச் சாலை பயண நேரத்தை 12 மணி நேரமாக குறைக்கும். ஒரு லாரி டெல்லியில் இருந்து மும்பையை அடைய 48 மணி நேரம் ஆகும். ஆனால் விரைவுச் சாலையில் அது 18 மணிநேரம் மட்டுமே ஆகும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News