செய்திகள்
முககவசம்

முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

Published On 2020-09-18 09:51 GMT   |   Update On 2020-09-18 09:51 GMT
வேப்பூர் அருகே முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
குன்னம்:

குன்னம் அருகே உள்ள வேப்பூர் கிராமத்தில் கொரோனா தடுப்பு பணியாக பொது இடங்களில் மக்கள் முககவசம் அணிவது மற்றும் வணிக நிறுவனங்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது குறித்த விழிப்புணர்வை பொது சுகாதார துறையினர் ஏற்படுத்தினர். மேலும் வேப்பூர் கிராமத்தில் உள்ள பஸ் நிலையம் மற்றும் வணிக நிறுவனங்களில் முககவசம் அணியாத கடைக்காரர்கள் மற்றும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் அபராதமாக ரூ.200 வசூலிக்கப்பட்டது. வேப்பூர் பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றி உள்ள கடைகளில் ஆய்வும் நடத்தப்பட்டது. இந்த பணியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளங்கோவன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் தனபால், பிரபாகரன் ஆகியோர் ஈடுபட்டனர்.

இதேபோல் மாவட்ட பகுதிகளிலும் அதிகாரிகள் ஆய்வு முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர். இதன்படி பெரம்பலூர், வேப்பூர் ஆகிய வட்டாரங்களில் தலா ரூ.1,800-ம், வேப்பந்தட்டை வட்டாரத்தில் ரூ.3 ஆயிரமும், வேப்பூரில் ரூ.1,600-ம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. போலீசார் நடத்திய ஆய்வில் முககவசம் அணியாதவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.1,600 அபராதம் வசூலித்தனர்.
Tags:    

Similar News