உள்ளூர் செய்திகள்
தியாகராஜ சுவாமிகள்

திருவையாறில் தியாகராஜர் ஆராதனை 22-ந் தேதி மட்டும் நடத்த முடிவு

Published On 2022-01-12 11:10 GMT   |   Update On 2022-01-12 11:10 GMT
குறைந்த அளவிலான இசை கலைஞர்களை கொண்டு பஞ்ச ரத்தின கீர்த்தனையும் கூடிய இசை அஞ்சலியுடன் இந்த ஆண்டு ஆராதனை விழா நிறைவுபெறுகிறது.
திருவையாறு:

திருவையாறு தியாகராஜர் சுவாமிகளின் 175-வது வருட ஆராதனை விழா வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 5 நாட்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டும், மாவட்ட கலெக்டரின் வேண்டுகோளின் படியும், ஆராதனை விழாவை தியாகராஜ சுவாமிகள் முக்தி அடைந்த பகுள பஞ்சமி தினமான வருகிற 22-ந் தேதி (சனிக்கிழமை) மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து 18-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

22-ந் தேதி காலை வழக்கம் போல் உச்சவிருத்தியும் பின்னர் விழா பந்தலில் நாதஸ்வர கச்சேரியும், தியாகராஜர் சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனையும் நடைபெறுகிறது. குறைந்த அளவிலான இசை கலைஞர்களை கொண்டு பஞ்ச ரத்தின கீர்த்தனையும் கூடிய இசை அஞ்சலியுடன் இந்த ஆண்டு ஆராதனை விழா நிறைவுபெறுகிறது.

விழா பந்தலுக்குள் 100 பேருக்கு மேல் அனுமதி இல்லை என்பதால் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்று விழாக் குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்சவ சபா தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News