செய்திகள்
கோப்புப்படம்

மத்திய மந்திரிசபையில் முதன் முதலாக இடம் பிடித்தது திரிபுரா

Published On 2021-07-07 23:23 GMT   |   Update On 2021-07-07 23:23 GMT
மத்திய மந்திரிசபையில் முதன் முதலாக மண்ணின் மகளான 52 வயது பிரதிமா பவுமிக் ராஜாங்க மந்திரியாக பதவி ஏற்றுள்ளார்.
புதுடெல்லி:

சுதந்திர இந்தியாவில் இதுவரையில் மத்திய மந்திரிசபையில திரிபுரா மாநிலம் இடம் பிடித்ததே இல்லை.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற மத்திய மந்திரிசபை விஸ்தரிப்பில் இந்த மாநிலத்துக்கு பிரதமர் மோடி பிரதிநிதித்துவம் அளித்தார்.

இந்த மண்ணின் மகளான 52 வயது பிரதிமா பவுமிக் ராஜாங்க மந்திரியாக பதவி ஏற்றுள்ளார். இவர் முதல் முறை எம்.பி. ஆவார். அகர்தலா பெண்கள் கல்லூரியில் படித்து வாழ்க்கை அறிவியல் பட்டம் பெற்றவர்.

பட்டம் பெற்ற பின்னர் இவர் கிராமத்துக்கு போய் தனது தந்தையின் விவசாயத்திலும், வியாபாரத்திலும் உதவி வந்தார். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் ஈடுபாடு கொண்டார். பின்னர் பா.ஜ.க.வில் சேர்ந்தார். இப்போது மந்திரியாகி இருக்கிறார். திரிபுராவின் சிங்கப்பெண் ஆகி அசத்தி இருக்கிறார்.
Tags:    

Similar News