ஆன்மிகம்
சிவலிங்கம்

நிறம் மாறும் ஈசன்

Published On 2021-04-07 09:21 GMT   |   Update On 2021-04-07 09:21 GMT
திருநல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் இறைவனின் சிவலிங்கத் திருமேனி, ஒரு நாளைக்கு ஐந்து முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால், இந்தப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

கும்பகோணத்தில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திருநல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலய இறைவனை ‘பஞ்சவர்ணேஸ்வரர்’ என்றும் அழைப்பார்கள்.

இங்குள்ள இறைவனின் சிவலிங்கத் திருமேனி, ஒரு நாளைக்கு ஐந்து முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால், இந்தப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது. அதாவது தாமிர நிறம், இளம் சிவப்பு, தங்க நிறம், நவரத்தின பச்சை, இன்ன நிறமென கூறமுடியாத வண்ணம் ஆகியவை இறைவனின் திருமேனியை ஒளிரச் செய்கின்றன.

இத்தலத்தில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், சிவலிங்கத்தின் ஒரே ஆவுடையாரின் இரண்டு பாணங்கள் அமைந்திருக்கின்றன.

Tags:    

Similar News