செய்திகள்
காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் காட்சி (Photo: AP)

ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு -100 பேர் பலி

Published On 2021-10-08 15:23 GMT   |   Update On 2021-10-08 15:23 GMT
ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் தொழுகையில் ஈடுபட்டு இருந்த 100-க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது.
காபூல்: 

ஆப்கானிஸ்தானின் குந்தூஸ் மாகாணத்தில் உள்ள மசூதி ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் சுமார் 100 பேர் பலியானதாக தலிபான் அதிகாரிகள் கூறி உள்ளனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என தெரிகிறது.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும்,  ஐஎஸ் பயங்கரவாத இயக்கமே சமீப காலமாக அங்கு இத்தகைய கொடூர தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது.  எனவே, இந்த தாக்குதலையும் அவர்களே நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ கூட்டுப்படைகள் வெளியேறிய பிறகு அங்கு நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News