ஆன்மிகம்
திருச்செந்தூர் கடலில் சுவாமி அஸ்திரதேவர் தீர்த்தவாரிக்கு பின்னர் கோவிலுக்கு புறப்பட்டபோது எடுத்த படம்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தீர்த்தவாரி

Published On 2021-07-19 04:06 GMT   |   Update On 2021-07-19 04:06 GMT
ஆடி மாத பிறப்பை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தீர்த்தவாரி நடந்தது. பின்னர் உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
ஆடி மாத பிறப்பை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று தீர்த்தவாரி நடந்தது. இதனை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

காலை 9 மணிக்கு சுவாமி அஸ்திரதேவர் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. பின்னர் உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மற்றகால பூஜைகள் நடந்தன.

ஆடி மாத பிறப்பை முன்னிட்டு, கோவிலில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடித்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News