லைஃப்ஸ்டைல்
முட்டை பொடிமாஸ் தோசை

முட்டை பொடிமாஸ் தோசை

Published On 2019-11-06 08:39 GMT   |   Update On 2019-11-06 08:39 GMT
மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு முட்டை பொடிமாஸ் தோசை கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 3
இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
முட்டை - 4
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
மிளகாய் தூள் - தேவைக்கேற்ப
தோசை மாவு (வீட்டில் தயாரித்த) - தேவைக்கேற்ப



செய்முறை :

வெங்காயம், தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்தவுடன் நறுக்கி வைத்த வொங்காயத்தை அதில் போட்டு பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.

வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி, உப்பு, மற்றும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

இவை நன்றாக வதங்கிய பிறகு 4 முட்டையை அதில் உடைத்து ஊற்றவும். அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு முட்டை அடிப்பிடிக்காமல் தொடர்ந்து கிளறவும். முட்டையை நன்றாக வெந்தவுடன், அடுப்பில் இருந்து இறக்கவும். முட்டை பொடிமாஸ் தயார்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தோசைக்கு மாவு எடுத்து முழு அளவில் ஊற்றாமல் சற்று சின்னதாக ஊற்றி, முட்டை பொடிமாஸை ஒரு கரண்டி அளவு போட்டு நன்றாக அமுக்கி விடுங்கள். தோசை மாவில் முட்டை பொடிமாஸ் நன்றாக அமுங்கி இருக்க வேண்டும். பின் தோசையை திருப்பி போட்டு நான்றாக வெந்ததும் எடுக்க வேண'டும். மூடி போட்டும் எடுக்கலாம். பின் சூடாக பரிமாறவும்..

கார சட்னி, தக்காளி தொக்கு, சிக்கன், மட்டன் கிரேவி ஏதாவது ஒன்றுடன் தொட்டு சாப்பிடலாம்.

குறிப்பு: இந்த தோசையை முட்டை பொடிமாஸுக்கு பதில், டார்க் சாக்லெட், கேரட், பீட்ரூட் ஆகியவைகளை கேரட் சீவியால் சீவி தோசைமேல் தூவியும் செய்யலாம் இது குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.

விஜயலெஷ்மி கமலகண்ணன்

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News