ஆன்மிகம்
இயேசு

ஞானம் தன் மக்களை மேன்மைப்படுத்தும்

Published On 2021-10-28 04:14 GMT   |   Update On 2021-10-28 04:14 GMT
ஞானத்தைத் தேடுவோர் சீரிய வழியில் நடக்கவே செய்வார்கள். வாழ்வில் சரி எது, பிழை எது, தவிர்க்க வேண்டியது எது, சேர்க்க வேண்டியத என்பதை ஞானமே நமக்குக் கற்றுத் தருகின்றது.
 “ஞானம் தன் மக்களை மேன்மைப்படுத்தும்| தன்னைத் தேடுவோருக்குத் துணை நிற்கும்.

ஞானத்திற்கு அன்பர் வாழ்விற்கும் அன்பர்| அதனை வைகறையிலே தேடுவோர் மகிழ்ச்சியால் நிரம்புவர். அதனைப் பற்றிக் கொள்வோர் மாட்சியை உரிமையாக்கிக் கொள்வர்| அது செல்லும் இடமெல்லாம் ஆண்டவர் ஆசி வழங்குவார்.  அதற்குப் பணி செய்வோர் தூய இறைவனுக்கே ஊழியம் புரிகின்றனர்| ஞானத்திற்கு அன்பர் ஆண்டவருக்கும் அன்பர்”.

ஞானத்தைத் தேடுவோர் சீரிய வழியில் நடக்கவே செய்வார்கள். இதனால் மக்கள் மத்தியில் அவர்களுக்கு மதிப்பும், சிறப்பும் வந்து சேரும். ஞானத்தோடு வாழ்பவராகக் காட்டிக் கொள்வொர் நிச்சயம் சிறுமைப்படுவார்கள். வாழ்வில் சரி எது, பிழை எது, தவிர்க்க வேண்டியது எது, சேர்க்க வேண்டியத என்பதை ஞானமே நமக்குக் கற்றுத் தருகின்றது.

ஐந்தாம்; நிலை

துணைக்கு வந்த சீமோன்

திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் சொல்லுகின்றோம். அதேதென்றால் உமது திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர். கூடவே வாழ்ந்த சீடர்கள், ... .. நன்மைகள் அனுபவித்த மனிதர்கள், .. .. யாரும் இல்லை அங்கே அந்த இக்கட்டில் உதவி செய்ய.! வாழும் வரை உறிஞ்சி வாழ்ந்து, .. ..வாழவைத்த மரத்தையே காய்ந்து போகப்பண்ணும் ஒட்டுண்ணிகளாக மனிதங்கள் .. ..

வாழ்ந்து நிற்கும் மனிதர்களைக் கண்டு மனம் காய்ந்து போகும் மனிதங்கள். .. பிறர் துன்பத்தில் உழலும் நிலை கண்டும் நெஞ்சில் ஈரம் பிறக்காத மனிதங்கள்.. ..
ஆறுதல் மொழிக்கே பஞ்சம் அந்த நாவுகளில்.. .. கருத்துள்ள உதவிக்கு வழியா இருக்கப்போகிறது? வேடிக்கை பார்த்தவன்தான் சீமோன்...! இயேசுவின் நன்மை தீமை அதிகம் அறியான் .. .. கேள்விப்பட்டதுண்டு .. .. ஆனால் அதிகம் நம்பிக்கை கொண்டதில்லை.. ..அவனுக்குச் சிரிப்பு.!.. .. இந்தக் கோலத்தில் அப்படிப்பட்ட வல்லமையா? .. .. நம்பிச் சென்றவர்க்கு இதுவும் வேண்டும்.. .. இதற்கு மேலேயும் வேண்டும்.

அவரை அருகில் காணும் வரையுந்தான் இந்தச் சிந்தனையோட்டம்.. .. ! கண்ட பிறகு அவன் சிந்தையில் மாற்றம்!!.. .. கேள்விப்பட்டதற்கும் மேலான ஒருவரல்லவா இங்கே தள்ளாடித் துவளுவது?

தன்னை உந்தித்தள்ளி உதவச் செய்த போர் வீரனுக்கு அவன் நன்றி கூறவேண்டும். தக்க சமயத்தில் துன்புற்ற மனிதத்திற்கு கை கொடுக்க முடிந்ததில் அவனுக்கு மகிழ்ச்சி!இவர்களில் ஒருவனுக்குச் செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள் என்ற இயேசுவிடம் சொல்லுவோம்:

“வாழ்வில் துன்புற்ற வேளையில் நான் உதவி தேடி அலைந்ததுண்டு.. ..வாழும் மனிதர்களோடே உறவு வைத்ததும் உண்டு .. .. தேவையில் மனிதம் வாடியபோது .. தேடி நான் பார்த்ததில்லை. .. வாழவேண்டி துடித்தவர் தமக்கு நான் கைகொடுக்க மறுத்ததும் உண்டு.. .. இயேசுவே மனிதம் யாராக இருப்பினும் அது நீரே என நான் நினைத்தல் வேண்டும்.. .. அல்லல்படும் உயிர்களுக்கு நான் ஆறுதலாக அமைதல் வேண்டும்.”

எங்கள் பேரிற் தயவாய் இரும் சுவாமி.. .. எங்கள் பேரிற் தயவாய் இரும்!

மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சர்வேசுரனின் இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவன. ஆமென்.
Tags:    

Similar News