உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மணல் குவாரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Published On 2022-01-13 09:39 GMT   |   Update On 2022-01-13 09:39 GMT
கரூரில் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மணல் குவாரிகள் அமைப்பதாக அரசு அறிவித்துள்ளதை கண்டித்து கரூரில் சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர்:

காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை அரசு  அறிவித்துள்ளது. இது மக்களின் வாழ்வாதாரம் அழிக்கும் செயல். எனவே மணல் குவாரிகள்  அமைப்பதற்கான நடவடிக்கைகளை கைவிடுமாறு குரல் எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி சாமானிய மக்கள் நலக்கட்சி மற்றும் தோழமை அமைப்புகள் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ப.குணசேகரன் தலைமையில் கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், சுயாட்சி இந்தியா கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேலு, திராவிடர் விடுதலை கழகம் தி.க.சண்முகம் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.

கரூர் மாநகரச்செயலாளர் ம.தென்னரசு வரவேற்றார். மாவட்ட செயலாளர் சண்முகம் நன்றி கூறினார்.

காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம், அமராவதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், சமூக கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்றனர்.
Tags:    

Similar News