செய்திகள்
ராமதாஸ்

தொடக்க நிலை பணியாளர் நியமன தடையை நீக்க வேண்டும் - ராமதாஸ்

Published On 2021-09-18 07:43 GMT   |   Update On 2021-09-18 11:43 GMT
கொரோனா நிலைமை சீரடைந்து பொருளாதாரம் வளர்ச்சியடையத் தொடங்கியுள்ள நிலையில் கடந்த ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுத்துறைகளில் தொடக்கநிலை பணியாளர்களை நியமிக்க முடியவில்லை. புதிய பணியிடங்களை ஏற்படுத்த தடை விதிக்கப்பட்டிருப்பதும், 3 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதும் தான் இதற்குக் காரணம் ஆகும்.

கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக 20.05.2020-ல் பிறப்பிக்கப்பட்டு, 24.10.2020-ல் திருத்தம் செய்யப்பட்ட நிதித்துறை அரசாணை எண் 382 இல் தான் இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவை இன்றைய சூழலுக்கு பொருந்தாதவை!

கொரோனா நிலைமை சீரடைந்து பொருளாதாரம் வளர்ச்சியடையத் தொடங்கியுள்ள நிலையில் கடந்த ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும். புதிய பணியிடங்களை உருவாக்கி, படித்து விட்டு காத்திருக்கும் இளைஞர்களுக்கு அரசு வேலைகளை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்...பிரதமர் மோடிக்கு ராகுலால் பதிலடி கொடுக்க இயலாது - திரிணாமுல் காங்கிரஸ் சொல்கிறது

Tags:    

Similar News