விளையாட்டு
கோலின்ஸ்

ஆஸ்திரேலிய ஓபன்: அரைஇறுதிக்கு கோலின்ஸ் முன்னேற்றம்

Published On 2022-01-26 05:09 GMT   |   Update On 2022-01-26 05:09 GMT
பிரான்ஸ் வீராங்கனையை 7-5, 6-1 என நெர்செட் கணக்கில் எளிதாக வீழ்த்தி அமெரிக்க வீராங்கனை கோலின்ஸ் அரையிறுதிக்கு முன்னேறினார்.
கிராண்ட்சிலாம் போட்டி களில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று காலை நடந்த பெண்கள் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் 27-வது வரிசையில் உள்ள டேனிலி கோலின்ஸ் (அமெரிக்கா)- அலிசி கோர்னெட் (பிரான்ஸ்) மோதினார்கள்.

இதில் கோலின்ஸ் 7-5, 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். 28 வயதான அவர் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் 2-வது முறையாக அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார். இதற்கு முன்பு 2019-ல் அரை இறுதி வரை வந்திருந்தார்.

கோலின்ஸ் அரை இறுதியில் இகா சுவாடெக் (போலந்து) அல்லது கனேபியுடன் (எஸ்தோனியா) மோதுகிறார். நாளை நடைபெறும் அரை இறுதி ஆட்டத்தில் முதல்நிலை வீராங்கனையான ஆஸ்லே பார்டி (ஆஸ்திரேலியா) - மேடிசன் கெய்ஸ் (அமெரிக்கா) மோதுகிறார்கள்.


ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெறும் கால் இறுதி ஆட்டங்களில் 2-வது வரிசையில் உள்ள டேனில் மெட்வதேவ் (ரஷியா) பெலிஸ் அலிஸ்மி (கனடா), 4-வது வரிசையில் உள்ள ஸ்டெபானோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்)- ஜானிக் சின்னர் (இத்தாலி) மோதுகிறார்கள்.

உலகின் 6-ம் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்), பெரிடினி (இத்தாலி) ஆகியோர் நேற்று நடந்த கால் இறுதி ஆட்டங்களில் வெற்றி பெற்றனர். இருவரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் அரை இறுதியில் மோதுகிறார்கள்.

Tags:    

Similar News