தொழில்நுட்பச் செய்திகள்
கூகுள்

கூகுள் நிறுவனத்திற்கு ரூ. 735 கோடி அபராதம் விதித்த ரஷ்யா நீதிமன்றம்

Published On 2021-12-25 06:19 GMT   |   Update On 2021-12-25 06:19 GMT
ரஷ்யாவில் சட்டவிரோத தகவல்களை நீக்க தொடர்ந்து தாமதம் செய்துவந்ததால் மாஸ்கோ நீதிமன்றம் கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் விதித்து இருக்கிறது.


கூகுள் நிறுவனம் ரஷ்யாவில் சட்டவிரோதம் என கருதப்படும் தகவல்களை நீக்க தொடர்ந்து தாமதம் செய்து வந்ததால், மாஸ்கோ நீதிமன்றம் கூகுள் நிறுவனத்திற்கு 7.2 பில்லியன் ரூபிள் இந்திய மதிப்பில் ரூ. 735 கோடி அபராதம் விதித்துள்ளது. ரஷ்யாவில் ரொக்கம் சார்ந்து விதிக்கப்பட்டுள்ள முதல் அபராதம் இது ஆகும்.

நடவடிக்கை எடுக்கும் முன் நீதிமன்ற உத்தரவை ஆய்வு செய்ய இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு துவக்கம் முதல் பலமுறை ரஷ்யா வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து வருகிறது. எனினும், நிறுவனம் ஒன்றின் வருடாந்திர வருவாயில் இருந்து குறிப்பிட்ட சதவீத தொகையை அபராதமாக விதித்து இருப்பது இதுவே முதல் முறை ஆகும். 



ரஷ்ய நீதிமன்றம் கூகுள் நிறுவனத்திற்கு எத்தனை சதவீதம் அபராதம் விதித்துள்ளது என்பதை அறிவிக்கவில்லை. எனினும், அபராத தொகையை கொண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கீடுகளின் படி கூகுள் நிறுவனத்திற்கு 8 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

போதை பொருள் துஷ்பிரயோகத்தை விளம்பரப்படுத்தும் தகவல்கள், வீட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பற்றிய விவரங்கள் அடங்கிய பதிவுகளை நீக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ரஷ்யா உத்தரவிட்டுள்ளது.
Tags:    

Similar News