செய்திகள்
கோவிஷீல்டு தடுப்பூசி

கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை உயர்த்தியது சீரம் நிறுவனம்

Published On 2021-04-21 08:12 GMT   |   Update On 2021-04-21 11:29 GMT
கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தியில் 50 சதவீதம் அரசுக்கும், 50 சதவீதம் தனியார் தொகுப்புக்கும் வழங்கப்படும் என்று சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மும்பை:

இந்தியாவில் தற்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி என அறிவித்த நிலையில் தடுப்பூசி விலைப்பட்டியலை புனே சீரம் நிறுவனம் வெளியிடப்பட்டுள்ளது.



அரசு மருத்துவமனைகளில் ரூ.400-க்கும், தனியார் மருத்துவமனைகளில் ரூ.600-க்கும் தடுப்பூசி செலுத்தப்படும்.

தடுப்பூசி உற்பத்தியில் 50 சதவீதம் அரசுக்கும், 50 சதவீதம் தனியார் தொகுப்புக்கும் வழங்கப்படும் என்று சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News