ஆன்மிகம்
பெருமாள்

‘பெரியோர்கள் கூறுவது பெருமாள் கூறுவது போல’ என்று சொல்வது ஏன்?

Published On 2020-11-09 06:56 GMT   |   Update On 2020-11-09 06:56 GMT
"பெரியோர்கள் கூறுவது பெருமாள் கூறுவது போல” என்பார்கள். அதற்கான காரணம் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
"பெரியோர்கள் கூறுவது பெருமாள் கூறுவது போல” என்பார்கள். காரணம் அவர்கள், நல்லது-தீயது என பல அனுபவங்களை பெற்று இருப்பார்கள். வெற்றி, தோல்விகளை சந்தித்து இருப்பார்கள். வெற்றிக்கான காரணம் எது?- தோல்விக்கான காரணம் எது என்பதை தெரிந்து வைத்திருப்பார்கள். அதனால் தங்களின் அனுபவத்தை எடுத்துச் சொல்லி மற்றவர்களை சரியான பாதையில் செல்ல வழி சொல்வார்கள்.

அதனால்தான் “பெரியவர்களின் சொல், பெருமாளின் சொல்” என்கிறார்கள். ஸ்ரீமந் நாராயண பெருமாள், கிருஷ்ணஅவதரம் மட்டும் எடுத்து மக்களுக்கு அறிவுரை கூறவில்லை. நமக்காகவே-நம் நன்மைக்காகவே அவதாரங்கள் எடுத்து வந்தவர். அதனால் அவருக்கு அனுபவம் ஜாஸ்தி. “எப்போது உலகத்தில் தர்மம் அழிந்து அதர்மத்தின் கை ஓங்குகிறதோ அப்போதெல்லாம் நான் அவதாரம் எடுத்து தர்மத்தை காப்பேன்.” என்பது பகவானின் வாக்கு. பெருமாளின் அவதாரங்கள் பத்து. அதுவே “தசாவதாரம்” என்கிறோம்.

அவை, மச்சவதாரம் – கூர்மா அவதாரம் – வராக அவதாரம் – நரசிம்மா அவதாரம் – வாமன அவதாரம் – பரசுராம அவதாரம் – ராமவதாரம் – பலராம அவதாரம் –
ஸ்ரீ கிருஷ்ணா அவதாரம் – கல்கி அவதாரம் ஆகிய பத்து அவதாரங்கள் உள்ளன.

இதில் இன்னும் கல்கி அவதாரத்தை பெருமாள் எடுக்கவில்லை. அதாவது, இந்த கலியுகத்தில் தர்மம் இன்னும் அழியவில்லை. அது கொஞ்சமாவது இருக்கிறது. ஆகவே, பெருமாளின் அவதாரங்கள் உலக மக்களின் நன்மைக்காகவே ஏற்படுகிறது.
Tags:    

Similar News