செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 3,57,229 பேருக்கு தொற்று

Published On 2021-05-04 04:58 GMT   |   Update On 2021-05-04 11:42 GMT
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,66,13,292 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 3,20,289 பேர் குணமடைந்துள்ளனர்.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 3 லட்சத்தை தாண்டிவிட்டது. உயிரிழப்பும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் நோய்த்தொற்று அதிகம் கண்டறியப்படும் மாநிலங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,02,82,833 உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,57,229 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 3,449  பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,22,408 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,66,13,292 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 3,20,289 பேர் குணமடைந்துள்ளனர்.



நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 34,47,133 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

நாடு முழுவதும் நேற்று வரை 15,89,32,921 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News