ஆன்மிகம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்

தீபத்திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் பந்தகால் நடும் முகூர்த்த விழா 28-ந்தேதி நடக்கிறது

Published On 2020-09-27 04:30 GMT   |   Update On 2020-09-26 06:12 GMT
தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பந்தகால் நடும் முகூர்த்த விழா வருகிற 28-ந் தேதி நடக்கிறது. விழாவில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆண்டு வருகிற நவம்பர் மாதம் 29-ந் தேதியன்று நடைபெற உள்ளது. தீபத்திருவிழாவினை முன்னிட்டு வருகிற 28-ந் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு மேல் 7 மணிக்குள் பந்தகால் நடும் முகூர்த்த விழா நடைபெற உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டு உள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் நடைபெறுவதால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இந்த பந்தகால் முகூர்த்த விழாவில் கலந்து கொள்ள அனுமதியில்லை.

இந்த விழாவில் மிகக்குறைந்த எண்ணிக்கையில் கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் மற்றும் முறைதாரர்கள் மட்டுமே முககவசம் அணிந்து கொண்டு கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் தீபத்திருவிழா வருகிற நவம்பர் மாதம் 17-ந் தேதியன்று துர்க்கையம்மன் உற்சவத்துடன் தொடங்கி தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும். தேர் திருவிழா உள்ளிட்ட இதர விழாக்கள் நடைபெற்று, நவம்பர் 29-ந் தேதி திருக்கார்த்திகை தீபத்திருவிழா, அதன் பின்னர் நடைபெறும் தெப்பல் உற்சவம் மற்றும் இறுதி விழாவான சண்டிகேஸ்வரர் விடையாற்றி திருவிழா வரை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் விதிக்கும் நிபந்தனைகளின் படியே நடைபெறும்.

இந்த தகவலை அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News