ஆன்மிகம்
கோவில்பட்டி வீரவாஞ்சி நகர்புற்று கோவிலில் கார்த்திகை பூஜை

கோவில்பட்டி வீரவாஞ்சி நகர்புற்று கோவிலில் கார்த்திகை பூஜை

Published On 2021-09-27 07:35 GMT   |   Update On 2021-09-27 07:35 GMT
வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகனுக்கு மஞ்சள், பால், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனை நடைபெற்றது
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சமேத சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக் கோவிலில் புரட்டாசி தேய்பிறை சஷ்டி, கார்த்திகை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி கணபதி பூஜையுடன் தொடங்கி, ஸ்தபன கும்ப கலச பூஜை, ருத்ர ஜெபம், மழை வேண்டி வருண ஜெபம், யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், மூலமந்திர ஹோமம், பூர்ணாகுதி, தீபாரதனை நடைபெற்றது.

தொடர்ந்து வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகனுக்கு மஞ்சள், பால், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனை நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து நெய் தீபம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News