ஆன்மிகம்
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில்

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் கொரோனா பரவல் தடுப்பு நடைமுறை

Published On 2021-03-26 06:56 GMT   |   Update On 2021-03-26 06:56 GMT
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது. இந்தக் கோவிலின் மாசித்திருவிழா மண்டகப்படி தாரர்கள், பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க சிறப்பு அனுமதி பெற்று நடத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி சிறப்பு வழிபாடுகள் தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனால் கோவில் நடை திறக்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News