உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

நல்ல குடிநீர் கிடைக்க நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் ரங்கசாமி வலியுறுத்தல்

Published On 2022-05-07 04:48 GMT   |   Update On 2022-05-07 04:48 GMT
நல்ல குடிநீர் கிடைக்க நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி:

புதுவை யூனியன் பிரதேசகத்தின் வளர்ச்சி திட்டத்தில் காலநிலை நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் என்ற தலைப்பில் 2 நாள் பயிற்சி முகாம் ஓட்டல் சன்வேயில் நடந்தது.

இதன் நிறைவு விழாவுக்கு சுற்றுச்சூழல் துறை செயலர் ஸ்மித்தா தலைமை வகித்தார். பயிற்சி முகாமில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி முதல்- அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:- 

புதுவை மாநிலத்தை கிளீன் அண்ட் கிரீன் என சொல்கிறோம். ஆனால் அப்படி உள்ளதா? என்பதை பார்க்க வேண்டும். என்னை பொறுத்த வரை சரியாக இல்லை என்பதுதான் எண்ணம். இன்னும் நிறைய சரி செய்ய வேண்டும். பசுமையான நிலையும் இப்போது குறைந்துள்ளது. பசுமையை நாம் உருவாக்க வேண்டும். 

முக்கிய சாலைகளில் செல்ல முடியாத வகையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் காற்றில் எவ்வளவு மாசு ஏற்பட்டுள்ளது? என்பதை பார்க்க வேண்டும். ஏரி, குளம் உட்பட நீர்நிலைகளை தூர்வாரி பாதுகாக்க வேண்டும் என சொல்கிறோம். 

ஆனால் அதை முழுமையாக செய்திருக்கிறோமா? என்றால்  இல்லை. 

எனவே நல்ல குடிநீர் கிடைக்க நீர்நிலைகளை பாதுகாத்து பராமரிக்க வேண்டும். இன்றைய சூழலில் குடிநீரின் நிலையை பார்த்தால் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் மோசமாக பாதிக்கப்படும். 

அதற்கு ஏற்ப இப்போதே நாம் திட்டமிட்டு நல்ல குடிநீர் எப்போதும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத தொழிற் சாலைகள் புதுவைக்கு வரவேண்டும் என்பதிலும் கவனம் செலுத்துகிறோம். 

இவ்வாறு அவர் பேசினார். 
Tags:    

Similar News