உள்ளூர் செய்திகள்
மீன்பிடி திருவிழா நடைபெற்ற போது எடுத்தப்படம்.

பொன்னமராவதியில் மீன்பிடி திருவிழா

Published On 2022-04-16 10:12 GMT   |   Update On 2022-04-16 10:12 GMT
பொன்னமராவதியில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில்  நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலம் துவங்கும் முன் விவசாய கண்மாய்களில் மீன்பிடி திருவிழா நடைபெறும். ஜாதி,மதம் பாராமல் அனைவரும்  ஒன்று கூடி  நடைபெறும்.

 மீன்படி திருவிழா கொரோனா பெறுந்-தொற்று ஊரடங்கு காரணமாகவும் போதிய நீரின்றிய காரணத்தாலும் சில ஆண்டுகளாக மீன்பிடி திருவிழா நடைபெற வில்லை இன்னிலையில் இன்று ரெட்டியபட்டி கிராமத்தில் நடைபெற்ற மீன்பிடி திரு-விழாவில் 

பொன்னமராவதி, ஆலவயல்,அம்மன்குறிச்சி, நகரப்பட்டி,மூலங்குடி, கண்டியானத்தம்,அரசமலை, காரையூர் உள்ளிட்ட  சுற்றுவட்டார பகுதியைச்சேர்ந்த 100க்கும் மேற்ப்பட்ட கிராம பொதுமக்கள் கண்மாயில் குவிந்தனர்.

 பாரம்பரிய முறையில் கண்மாயில் இறங்கி பொதுமக்கள்  ஊத்தா,வலை,தூரி, கூடை,பரி,கச்சா ஆகியவைகளை கொண்டு லாபகரமாக மீன்பிடிக்கத்-தொடங்கினர். 

அதில் ஒவ்வொருத்தர் கைகளுக்கும் நாட்டு வகை மீன்களான ஜிலேபி, கெண்டை, அயிரை,விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன இருப்பினும் போதிய மழையில்லாததால் மீன் பெருக்காமல் அரைக்கிலோவுக்கு எடை கொண்டை மீன்கள் மட்டுமே -கிடைத்தன. பொன்னமராவதி சுற்றுவட்டாரப்பகுதிகளில் 2 முதல் 3 கிலோ எடை கொண்ட மீன்கள் கிடைத்தது குறிப்பிடதக்கது.
Tags:    

Similar News