தொழில்நுட்பம்

நிமிடங்களில் 1.5 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்த ரியல்மி

Published On 2019-03-13 03:16 GMT   |   Update On 2019-03-13 03:16 GMT
இந்தியாவில் ரியல்மி 3 ஸ்மார்ட்போனின் முதல் விற்பனையில் சுமார் 1.5 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. #Realme3



ஒப்போவின் துணை பிராண்டு ரியல்மி இந்தியாவில் ரியல்மி 3 ஸ்மார்ட்போனினை கடந்த வாரம் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை நேற்று (மார்ச் 12) நடைபெற்றது. மதியம் சரியாக மதியம் 12 மணிக்கு துவங்கிய விற்பனை சில நிமிடங்களில் நிறைவுற்றது.

ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நடைபெற்ற விற்பனையில் சுமார் 1.5 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டதாக ரியல்மி அறிவித்துள்ளது. முதல் விற்பனையில் அமோக வரவேற்பு கிடைத்திருப்பதை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன் மீண்டும் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டது. 



பின் நேற்று இரவு 8 மணிக்கு மீண்டும் விற்பனைக்கு வந்தது. இதில் ஸ்மார்ட்போனினை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.500 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்பட்டது. இத்துடன் ஜியோ சார்பில் ரூ.5,300 மதிப்பிலான சலுகைகள் வழங்கப்பட்டது.

இத்துடன் மார்ச் 13 முதல் மார்ச் 15 ஆம் தேதி வரை ரியல்மி ஹோலி விற்பனை நடைபெறுகிறது. இதில் ரியல்மி சி1 (2019) ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரூ.99 மதிப்புள்ள மொபைல் பாதுகாப்பு சலுகை வழங்கப்படுகிறது. இந்த ஸ்மாரட்போனின் 2 ஜி.பி. ரேம் வெர்ஷன் ரூ.7,499, 3 ஜி.பி. ரேம் வெர்ஷன் ரூ.8,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.



தள்ளுபடி விற்பனையில் ரியல்மி யு1 ஸ்மார்ட்போன் ரூ.1000 உடனடி தள்ளுபடி, ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.1000 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் மொபிக்விக் மூலம் பணம் செலுத்துவோர் 20 சதவிகிதம் சூப்பர்கேஷ் வழங்கப்படுகிறது.

முதல் நாளில் மட்டும் இரண்டு முறை நடைபெற்ற விற்பனையில் மொத்தம் சுமார் 2,10,000 ரியல்மி 3 ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி இருக்கின்றன. ரியல்மி 3 ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனை மார்ச் 19 ஆம் தேதி மதியம் 12.00 மணிக்கு நடைபெற இருக்கிறது. 
Tags:    

Similar News