ஆட்டோமொபைல்
டாடா டியாகோ ஜெ.டி.பி. மற்றும் டிகோர் ஜெ.டி.பி.

மேம்பட்ட டாடா டியாகோ ஜெ.டி.பி. மற்றும் டிகோர் ஜெ.டி.பி. இந்தியாவில் அறிமுகம்

Published On 2019-08-14 10:37 GMT   |   Update On 2019-08-14 10:37 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மேம்பட்ட டியாகோ ஜெ.டி.பி. மற்றும் டிகோர் ஜெ.டி.பி. மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.



டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மேம்பட்ட டியாகோ மற்றும் டிகோர் ஜெ.டி.பி. மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 2019 டாடா டியாகோ ஜெ.டி.பி. விலை ரூ. 6.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்றும் டிகோர் ஜெ.டி.பி. விலை ரூ. 7.59 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஸ்டான்டர்டு மாடல்களை விட ஜெ.டி.பி. மாடல்கள் அதிக செயல்திறன் மற்றும் மெக்கானிக்கல் அப்கிரேடுகளை கொண்டிருக்கிறது. டாடா டியாகோ மற்றும் டிகோர் ஜெ.டி.பி. எடிஷன்கள் ஆட்டோ ஃபோல்டு ORVMகள், பியானோ பிளாக் ஷார்க் ஃபின் ஆன்டெனா வழங்கப்படுகிறது.

மற்றபடி கிளாஸ் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்ட கிரில், ஜெ.டி.பி. பேட்ஜ், காண்டிராஸ்ட் பிளாக் ஃபினிஷ் ரூஃப், டைமண்ட் கட் அலாய் வீல்கள், ஃபாக்ஸ் ஹூட் ஸ்கூப்கள், மேம்பட்ட பம்ப்பர் வழங்கப்படுகிறது. 



காரின் உள்புறம் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ஹார்மன் 7-இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வசதிகள் வழங்கப்படுகின்றன. முன்னதாக இந்த அம்சம் ஸ்டான்டர்டு டியாகோ மாடலில் வழங்கப்பட்டது.

டாடா டியாகோ ஜெ.டி.பி. மற்றும் டிகோர் ஜெ.டி.பி. மாடல்களில் 1.2 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 112 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 150 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News