ஆன்மிகம்
முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பால்குட ஊர்வலம்

முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பால்குட ஊர்வலம்

Published On 2021-04-05 07:36 GMT   |   Update On 2021-04-05 07:36 GMT
கமுதி முத்துமாரியம்மன் கோவில் பங்குனி விழாவில் பக்தர்கள் சார்பில் நந்தவனத்தில் இருந்து பெண்கள், சிறுவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் விரதம் இருந்து பால்குடம் எடுத்துச் சென்றனர்.
கமுதி முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் கடந்த 30-ம் தேதி பொங்கல் திருவிழாவும் 31-ம் தேதி அக்னிச்சட்டி திருவிழாவும் நடைபெற்றது.

மேலும் விழாவில் நேற்று பக்தர்கள் சார்பில் நந்தவனத்தில் இருந்து பெண்கள், சிறுவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் விரதம் இருந்து பால்குடம் எடுத்துச் சென்றனர். இந்த பால்குட ஊர்வலம் மேளதாளங்களுடன் நந்தவனத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக முத்துமாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. மேலும் மாலையில் கோவிலை சுற்றி 2007 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News