ஆன்மிகம்
சீரடி சாய்பாபா

சீரடி தலத்துக்குள் ஜீவ சமாதிகள்

Published On 2019-11-08 07:50 GMT   |   Update On 2019-11-08 07:50 GMT
சீரடி தலத்துக்குள் பாபாவுக்கு மட்டுமல்ல அவரது முதன்மை பக்தர்களாக திகழ்ந்த 4 பேரின் ஜீவ சமாதிகளும் அமைந்துள்ளன.
சீரடி தலத்துக்குள் பாபாவுக்கு மட்டுமல்ல அவரது முதன்மை பக்தர்களாக திகழ்ந்த 4 பேரின் ஜீவ சமாதிகளும் அமைந்துள்ளன. பாபாவிடம் மிகவும் பிரியமாக இருந்தவர்களில் தாத்யா படேலும் ஒருவர். பாபாவின் தெய்வீக செயல்களை இந்த உலக மக்கள் பார்த்து பலன்பெற வைத்தவர்களில் இவரும் ஒருவராவார். இவரது ஜீவ சமாதி உள்ளது.

அருகில் பாவு மகராஜ் கும்பா என்பவரின் ஜீவ சமாதி உள்ளது. இவர் பாபா எங்கு சென்றாலும், அந்த இடத்தை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்யும் பணி செய்தவராவார்.

பாபாவின் பக்தர்களில் சற்று வித்தியாசமானவர் நானாவால். அவருக்கும் அங்கு ஜீவ சமாதி இருக்கிறது.

பாபாவிடம் அன்பு கொண்டிருந்த சீரடிவாழ் மக்களில் அப்துல்பாபாவும் ஒருவர். சாவடிக்கு எதிரில் அப்துல் பாபா வீடு உள்ளது. சாய்பாபாவை அல்லாவின் மறு உருவமாக நினைத்து அப்துல் பாபா வழிபட்டு வந்தார். அவரது சமாதியும் உள்ளே இருக்கிறது. பச்சை சால்லை போர்த்தப்பட்ட அப்துல்பாபா சமாதியை சுற்றி வந்து பக்தர்கள் வணங்கி செல்வதை காணலாம்.

இந்த வரிசையில் ஷியாம் சுந்தர் குதிரையின் சமாதியும் உள்ளது. புனாவைச் சேர்ந்த நானாசாகிப் என்பவர் பாபாவுக்கு இந்த குதிரையை அன்பளிப்பாக கொடுத்திருந்தார். துவாரகமாயில் தினசரி வழிபாடு முடிந்ததும், பாபா முதலில் இந்த குதிரைக்குத்தான் உதியை பூசி விடுவார். பாபாவின் செல்லமாக திகழ்ந்ததால் மகான்களின் சமாதி வரிசையில், இந்த குதிரையும் இடம் பெற்றுள்ளது.

Tags:    

Similar News