செய்திகள்
அத்வானி

பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு, ராமகோபாலன் மரணம் உள்ளிட்ட முக்கியமான செய்திகள் வீடியோ தொகுப்பாக...

Published On 2020-09-30 15:31 GMT   |   Update On 2020-09-30 15:31 GMT
பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு, ராமகோபாலன் மரணம், பா.ஜனதாவுக்கு குஷ்பு வந்தால் வரவேற்போம் என எல்.முருகன் கூறியது உள்பட முக்கிய செய்திகள் வீடியோ தொகுப்பாக...
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை- சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றங்களை போதிய ஆதாரங்களுடன் சிபிஐ நிரூபிக்கத் தவறியதால் 32 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பாபர் மசூதி இடிப்பு திட்டமிட்ட சதி அல்ல- சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

பாபர் மசூதி இடிப்பு திட்டமிட்ட சதி அல்ல என்றும் பாபர் மசூதியை இடித்தது சமூக விரோதிகளே என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.


பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி - ராஜ்நாத் சிங் வாழ்த்து

நீண்ட தூரம் சென்று தாக்கக் கூடிய அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றிக்கு பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் வரலாற்றில் சோகமான நாள்: பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு குறித்து அசாதுதீன் ஒவைசி கருத்து

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வழங்கப்பட்டதீர்ப்பு குறித்து ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கருத்து தெரிவித்துள்ளார்.

நீதியின் கேலிக்கூத்து: பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு குறித்து சீதாராம் யெச்சூரி அதிருப்தி

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிபிஐ அளித்த தீர்ப்பு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கு- சிபிஐ நீதிமன்ற தீர்ப்புக்கு பாஜக தலைவர்கள் வரவேற்பு

பாபர் மசூதி வழக்கில் சிபிஐ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அத்வானி, முரளி மனோகர் ஜோஷி தெரிவித்தனர்.

இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் காலமானார்

உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த இந்து முன்னணி அமைப்பின் தலைவர் ராமகோபாலன் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார்.

குஷ்பு பாஜகவில் இணைந்தால் வரவேற்பேன்- எல்.முருகன்

சுந்தர் சி - எல்.முருகன் சந்திப்பை தொடர்ந்து குஷ்பு பாஜகவில் இணைவாரா? என்ற கேள்வி எழுந்த நிலையில், பா.ஜனதாவில் இணைந்தால் வரவேற்பேன் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறி உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி சோதனை முயற்சியை தொடங்கியுள்ளோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி சோதனை முயற்சியை தொடங்கியுள்ளோம் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

திருநெல்வேலி, செங்கோட்டை, ராமேஸ்வரம், மதுரைக்கு சிறப்பு ரெயில்

சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி, செங்கோட்டை, ராமேஸ்வரம், மதுரைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகள் நம்பிக்கை வீண் போகக் கூடாது- கமல்ஹாசன்

நீதிக்கிடைக்கும் என்ற இந்தியனின் நம்பிக்கை வீண் போகக் கூடாது. பாபர் மசூதி இடிப்பு பற்றி கமல்ஹாசன் டுவிட் செய்துள்ளார்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றச்சதியை நிரூபிக்க முடியாத‌து, சட்டத்தின் ஆட்சிக்கு மிகுந்த தலைகுனிவு- ஸ்டாலின்

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றச்சதியை நிரூபிக்க முடியாத‌து, சட்டத்தின் ஆட்சிக்கு மிகுந்த தலைகுனிவு என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பாரிஸ் நகரை பதற்றத்தில் உறைய வைத்த சத்தம்- காரணம் இதுதான்

பாரிஸ் நகரில் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது போன்ற சத்தம் கேட்டதால், நகரில் எங்காவது தாக்குதல் நடத்திருக்கலாம் என்ற பதற்றம் உருவானது.

‘மெஸன்சாட்’ கியூப் செயற்கைக்கோள் முதல் சிக்னலை அனுப்பியது

அமீரகத்தில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய ‘மெஸன்சாட்’ கியூப் செயற்கைக்கோள் ரஷியாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. தற்போது நேற்று அந்த செயற்கைக்கோள் தனது முதல் சிக்னலை வெற்றிகரமாக அனுப்பியுள்ளது.

பிரெஞ்ச் ஓபனில் இருந்து செரீனா வில்லியம்ஸ் விலகல்

கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான பிரெஞ்ச் ஓபனில் இருந்து காயம் காரணமாக செரீனா வில்லியம்ஸ் விலகியுள்ளார்.

ஷுப்மான் கில்லை இன்னும் 2 வருடத்திற்குள் கேப்டனாக பார்க்கலாம்: சைமன் டவுல்

தினேஷ் கார்த்திக், மோர்கன் மற்றும் மெக்கல்லம் ஆகியோரிடம் இருந்து கேப்டன் பதவிக்கான திறனை ஷுப்மான் கில் பெற்றுக் கொள்ள வேண்டும் என சைமன் டவுல் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் விளையாட முடியாமல் போய்விட்டதே... முஸ்தாபிஜூர் ரஹ்மான் வருத்தம்

இலங்கை தொடரில் விளையாடுவதற்காக ஐபிஎல் தொடரை புறக்கணித்த முஸ்டாபிஜூர் ரஹ்மானுக்கு, தற்போது இலங்கை தொடர் ஒத்தி வைக்கப்பட்டதால் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

5 முன்னணி இயக்குனர்கள் இணைந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஐந்து முன்னணி இயக்குனர்கள் இணைந்து உருவாக்கிய புத்தும் புது காலை என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெடியாகிறார் ‘அண்ணாத்த’ - ஷூட்டிங் அப்டேட்

சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Tags:    

Similar News