செய்திகள்
வாக்குச்சாவடியில் பலத்த பாதுகாப்பு

ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் முதல்கட்ட தேர்தல்- வாக்குப்பதிவு நிலவரம்

Published On 2020-11-28 08:34 GMT   |   Update On 2020-11-28 08:34 GMT
ஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்புடன் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு இன்று நடைபெற்றது.
ஜம்மு:

ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 234 பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல்கட்ட வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் இன்று நடைபெற்றது. 

காலையில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது. அதன்பின்னர் வாக்காளர் வருகை படிப்படியாக அதிகரித்தது. எனினும் எதிர்பார்த்த அளவிற்கு வாக்குகள் பதிவாகவில்லை. காலை 11 மணி நிலவரப்படி 22.12 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. 2 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 2 மணிக்கு வரிசையில் நின்றவர்கள் வாக்களிக்க கூடுதல் நேரம் வழங்கப்பட்டுள்ளது.

மொத்தம் உள்ள 280 தொகுதிகளில் இன்று காஷ்மீரில் 25 மற்றும் ஜம்முவில் 18 என மொத்தம் 43 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 296 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 

தேர்தலை முன்னிட்டு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், பலத்த பாதுகாப்புகளுடன் தேர்தல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News