தொழில்நுட்பச் செய்திகள்
பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் கணக்கை பதம்பார்த்த ஹேக்கர்கள்

Published On 2021-12-13 06:11 GMT   |   Update On 2021-12-13 06:11 GMT
பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கில் பிட்காயின் பற்றிய பதிவு வெளியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பிரதமரின் அக்கவுண்டில் 'இந்தியாவில் பிட்காயின் சட்டப்பூர்வ பரிவர்த்தனைக்கு அனுமதி அளிக்கப்பட்டது,' எனும் டுவிட் இடம்பெற்று இருந்தது.

டுவிட் வெளியான சில நிமிடங்களில் அக்கவுண்ட் மீட்கப்பட்டது என பிரதமர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 'பிரதமர் நரேந்திர மோடியின் டுவிட்டர் அக்கவுண்ட் சிறிது நேரத்திற்கு ஹேக் செய்யப்பட்டது. இதுபற்றி டுவிட்டருக்கு தகவல் அளிக்கப்பட்டு, அக்கவுண்ட் உடனடியாக மீட்கப்பட்டது. இடைப்பட்ட நேரத்தில் பதிவான டுவிட்களை தவிர்க்கவும்,' என பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.



முன்னதாக செப்டம்பர் 2020 வாக்கில் பிரதமரின் தனிப்பட்ட வலைதளம் ஹேக் செய்யப்பட்டு, அப்போதும் பிட்காயின்களை விளம்பரப்படுத்தும் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News