செய்திகள்
கோப்புப்படம்.

சுகாதார முறையில் செல்லப்பிராணிகள் வளர்ப்பு-கால்நடை டாக்டர்கள் அறிவுறுத்தல்

Published On 2021-07-17 08:49 GMT   |   Update On 2021-07-17 08:49 GMT
வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளை கவனித்தல், அதற்கு தேவையானவற்றை பூர்த்தி செய்தல் போன்ற செயல்கள் நேர்மறையான எண்ணங்களை வளர்க்கிறது.
உடுமலை:

கொரோனா பரவல் காரணமாக பலரும் தேவையற்ற பயணத்தை தவிர்த்து வருகின்றனர். அதேநேரம் வீட்டிலேயே இருப்பதால்  மன அழுத்தம் போக்க செல்லப்பிராணி வளர்ப்பில் கவனம் செலுத்துகின்றனர்.

பொழுதுபோக்கு மற்றும் மனதிற்கு மகிழ்வைத்தரும் என்பதால்  நாய், பூனை வளர்ப்பில் ஈடுபடுகின்றனர்.அவ்வகையில் உடுமலை நகரில்  அதிகப்படியான வீடுகளில் செல்லப்பிராணிகள் வளர்ப்பு காணப்படுகிறது. அவைகளுக்கு ஏதேனும் பாதிப்பு கண்டறியப்பட்டால்  உடனே கால்நடை டாக்டரை அணுகி சிகிச்சை பெறவும் முனைப்பு காட்டுகின்றனர்.

இது குறித்து கால்நடை டாக்டர்கள் கூறியதாவது:-

வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளை கவனித்தல், அதற்கு தேவையானவற்றை பூர்த்தி செய்தல் போன்ற செயல்கள் நேர்மறையான எண்ணங்களை வளர்க்கிறது. பலர் மனம் மற்றும் உடல் ரீதியாக உற்சாகம் அடைவதை காண முடிகிறது.

வீட்டில் முடங்கிக்கிடக்கும் சிலர் செல்லப்பிராணிகளை வளர்க்க முற்படுகின்றனர்.அதே நேரம் செல்லப்பிராணிகள் வளர்ப்பில்  சுகாதாரம் மிக அவசியமாகும்.அவைகளுக்கு ஏற்படும் உடல் நலப்பிரச்சினைகளை கண்டறிந்தால்  உடனே சிகிச்சை பெற வேண்டும்.

அதேபோல் இப்பிராணிகளின் விளையாட்டில் நமது உடலில் ஏதேனும் பாதிப்பு  ஏற்பட்டாலும்  டாக்டரிடம் சிகிச்சை பெறுதல் வேண்டும். செல்லப்பிராணிகள் வளர்ப்பில் கவனம் கொள்ள வேண்டும்.

இவ்வாறு  அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News