செய்திகள்
விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா

நியூசிலாந்து தொடர்: இந்திய ஏ அணியில் ஹர்திக் பாண்ட்யாவுக்குப் பதில் விஜய் சங்கர்

Published On 2020-01-12 11:57 GMT   |   Update On 2020-01-12 11:57 GMT
நியூசிலாந்து செல்ல இருந்த ஹர்திக் பாண்ட்யா உடற்பயிற்சி பரிசோதனையில் தோல்வியடைந்ததால், இந்திய ஏ அணியில் விஜய் சங்கர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய ஏ கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு 50 ஓவர் வார்ம்-அப் மேட்ச், மூன்று லிஸ்ட் ஏ போட்டிகள் மற்றும் இரண்டு நான்கு நாட்கள்  கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.

இதற்கான இந்திய ஏ அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியா இடம் பிடித்திருந்தார். கடைசி நேரத்தில் அவர் உடற்பயிற்சி சோதனையில் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்திய ஏ அணியில் அவருக்குப் பதிலாக விஜய் சங்கர் சேர்க்கப்பட்டுள்ளார்.
Tags:    

Similar News