ஆன்மிகம்
கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2021-01-21 07:55 GMT   |   Update On 2021-01-21 07:55 GMT
கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரவு சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரவு சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று முதல் (வியாழக்கிழமை) வருகிற 25-ந் தேதி வரை தினந்தோறும் காலை பல்லக்கு உற்சவம், இரவு அன்னம், ரிஷபம், மயில் மற்றும் யானை உள்ளிட்ட வாகனங்களில் சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

26-ந் தேதி இரவு திருக்கல்யாண உற்சவம், 27-ந் தேதி இரவு குதிரை‌ வாகனத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி, 28-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் சாமி திருத்தேருக்கு எழுந்தருளலும், மாலை 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் நிகழ்‌ச்சியும் நடைபெறுகிறது. 29-ந் தேதி முதல் பிப்ரவரி மாதம் 1-ந் தேதி வரை சாமி இரவு பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News