செய்திகள்
ரெம்டெசிவிர்

கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் பலனளிக்கவில்லை: ஐ.சி.எம்.ஆர்.

Published On 2020-10-16 15:20 GMT   |   Update On 2020-10-16 15:20 GMT
கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிர், லோபினாவிர் போன்ற மருந்துகள் பலனளிக்கவில்லை என்று ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும்போது தடுப்பூசி இல்லாததால் ரெம்டெசிவிர், ஹைட்ராக்சி குளோரோகுயின் போன்ற மருந்துகள் ஆபத்தான நிலையில் உள்ளவர்களை காப்பாற்ற பயன்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஒவ்வொரு நாடுகள் அதிக அளவில் இறக்குமதி செய்தன.

நாட்கள் செல்ல செல்ல ஒவ்வொரு நாடுகளும் தங்களுடைய கருத்துக்களை மாற்றிக்கொண்டன. இந்தியாவும் ரெம்டெசிவிர் மருந்தை பயன்படுத்தியது.

இந்நிலையில் ரெம்டெசிவிர், ஹைட்ராக்சி குளோரோகுயின் போன்ற மருந்துகள் கொரோனா சிகிச்சைக்கு பலனளிக்கவில்லை என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. மேலும் லோபினாவிர், ரிட்டோனாவிர் மருந்துகளும் பலனளிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.

இடைக்காலமாக பகுப்பாய்வு செய்ததில் பலனளிக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் கீழ் இணைந்து நடத்திய சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News