செய்திகள்
லடாக்கில் 3.8 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்
லடாக்கின் லே பகுதியில் நேற்று நள்ளிரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
லே:
யூனியன் பிரதேசமான லடாக்கின் லே பகுதியில் நேற்று நள்ளிரவு திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.