கிறித்தவம்
காயல்பட்டினம் கொம்புத்துறை புனித முடியப்பர் ஆலயத்திருவிழாகொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்

காயல்பட்டினம் கொம்புத்துறை புனித முடியப்பர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2021-12-25 04:50 GMT   |   Update On 2021-12-25 04:50 GMT
காயல்பட்டினம் கொம்புத்துறை புனித முடியப்பர் ஆலயத்தில் 477-வது ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பழமைவாய்ந்த காயல்பட்டினம் கொம்புத்துறை புனித முடியப்பர் ஆலயத்தில் 477-வது ஆண்டு திருவிழா நேற்று தொடங்கியது.

மணப்பாடு மறைவட்ட முதன்மை குரு இருதயராஜ் பர்னாந்து அடிகளார் கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற கொடியேற்று விழா திருப்பலியில்

வீரபாண்டியன்பட்டணம் பங்குத்தந்தைகள் கிருபாகரன் அடிகளார், கர்லோஸா அடிகளார், கொம்புத்துறை பங்குத்தந்தை சில்வர்ஸ்டர் அடிகளார், கொம்புத்துறை பங்குத்தந்தை பிரதீஷ் அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழா ஏற்பாடுகளை பங்குதந்தை பிரதீஸ் அடிகளார் மற்றும் ஊர் கமிட்டி தலைவர் மரியநாயகம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தொடர்ந்து ஆலயத்தில் திருவிழா நாட்களில் காலையில் திருப்பலியும், மாலையில் மறையுரை, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது. ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டு தினத்தை முன்னிட்டு காலையில் புத்தாண்டு திருப்பலியை தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை நிறைவேற்றுகிறார். மாலையில் ஆராதனையையும் அவர் நடத்துகிறார். 2-ம் தேதி காலை 7 மணியளவில் சேலம் மாவட்டத்தின் முன்னாள் ஆயர் சிங்கராயர் ஆண்டகை கலந்து கொண்டு திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலியை நிறைவேற்றுகிறார்.

அதில் சிறுவர், சிறுமியர் முதல் நற்கருணை உட்கொள்ளுதல், மற்றும் உறுதிப்பூசுதல் நிகழ்ச்சிகள் நடைபெறும். தொடர்ந்து அன்று காலையில் இருந்து மாலை வரை தொடர்ந்து திருப்பலி நடைபெறும்.

முதலில் ஆறுமுகநேரி இறை மக்களுக்காக அலாய்சியஸ் அடிகளாரும், சிங்கித்துறை மக்களுக்காக சில்வெஸ்டர் அடிகளாரும், தூத்துக்குடி, குரும்பூர், பங்கு மக்களுக்காக பபிஸ்டன் அடிகளார், பழையகாயல் பங்கு மக்களுக்காக அருட்பணியாளர் அமலன் அடிகளாரும், புன்னக்காயல் பங்கு மக்களுக்காக புன்னக்காயல் பங்குத்தந்தை பிராங்கிளின் அடிகளார், மற்றும் துணை பங்குத்தந்தை சுதர்சன் அடிகளாரும், மாலை 4 மணியளவில் வீரபாண்டியன்பட்டணம் பங்குமக்களுக்காக பங்குத்தந்தை கிருபாகரன் அடிகளார், உதவி பங்குத்தந்தை பணிமயம் அடிகளாரும் திருப்பலி நிறைவேற்றுகின்றனர்.

தொடர்ந்து ஆலந்தலை அமலிநகர் ஜீவாநகர் மக்களுக்காக அருட்பணியாளர்கள் ஜெயக்குமார் அடிகளார், ரவீந்திரன் அடிகளார் ஆகியோர் திருப்பதி நிறைவேற்றுகின்றனர்.

2-ஆம் தேதி திருவிழா நாளன்று சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது பிற மதத்தவர்களும் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபடுவது சிறப்பு அம்சமாகும்.
Tags:    

Similar News