செய்திகள்
திருக்காட்டுப்பள்ளி ஏல மையத்தில் விற்பனைக்கு குவிந்த வாழைத்தார்கள்.

திருக்காட்டுப்பள்ளி ஏல மையத்தில் குவிந்த வாழைத்தார்கள்

Published On 2021-01-11 14:55 GMT   |   Update On 2021-01-11 14:55 GMT
திருக்காட்டுப்பள்ளி ஏல மையத்தில் வாழைத்தார்கள் விற்பனை குவிந்தன. விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
திருக்காட்டுப்பள்ளி:

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி மார்க்கெட் பகுதியில் வாழைத்தார் ஏல மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏல மையத்தில் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் இருந்து விவசாயிகள் வாழைத்தார்களை வெட்டிக் கொண்டு வந்து ஏலம் விடுவது வழக்கம்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று பல்வேறு கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் வாழைத்தார்களை கொண்டு வந்து ஏல மையத்தில் குவித்தனர்.

ஏல மையத்தில் நேற்று காலை 10 மணியிலிருந்து வாழைத்தார்கள் ஏலம் விடப்பட்டன. பூவன், ரஸ்தாளி, பச்சை நாடன் உள்ளிட்ட வாழை ரகங்கள் அதிக அளவில் ஏலத்துக்கு வந்திருந்தன.

அவற்றை பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் ஏலம் மூலமாக வாங்கி விற்பனைக்கு எடுத்து சென்றனர்.

நேற்று அனைத்து வாழை ரகங்களும் சுமாரான விலைக்கே ஏலம் போயின. தொடர்ந்து பொங்கல் பண்டிகை வரை பகல் நேரத்தில் வாழை ஏலம் நடைபெறும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News