செய்திகள்
பிப்லாப் குமார் தேப்

திரிபுரா முதல்-மந்திரிக்கு கொரோனா - வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார்

Published On 2021-04-07 22:51 GMT   |   Update On 2021-04-07 22:51 GMT
திரிபுரா மாநில முதல்-மந்திரியாக இருப்பவர் பிப்லாப் குமார் தேப். பா.ஜ.க. வை சேர்ந்த இவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
அகர்தலா:

திரிபுரா மாநில முதல்-மந்திரியாக இருப்பவர் பிப்லாப் குமார் தேப் (வயது 49). பா.ஜ.க. வை சேர்ந்த இவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதையொட்டி அவர் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “ எனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. நான் டாக்டர்கள் அறிவுறுத்தல்படி வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். அனைவரும் கொரோனா கால விதிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

அவர் கடந்த சில நாட்களாக திரிபுரா பழங்குடி பகுதிகள் தன்னாட்சி மாவட்ட கவுன்சில் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு, ஏராளமானோருடன் தொடர்பில் இருந்ததால், அவர்களுக்கெல்லாம் இப்போது கொரோனா பீதி ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முக கவசம் அணியாமல் கட்சியினருடன் அவர் கலந்துரையாடியது ஊடகங்களில் கடும் விமர்சனத்துக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News