தொழில்நுட்பம்
ஐபோன் 11

ஐபோனில் அந்த பிரச்சனை ஏற்பட்டால் இதை மட்டும் செய்யுங்கள்

Published On 2020-10-05 07:03 GMT   |   Update On 2020-10-05 07:03 GMT
ஐஒஎல் 14 இன்ஸ்டால் செய்தவர்கள் தங்களின் சாதனத்தில் அந்த பிரச்சனை ஏற்பட்டால் இதை மட்டும் செய்யுங்கள் என ஆப்பிள் கேட்டுக் கொண்டுள்ளது.


ஆப்பிள் நிறுவனத்தின் ஐஒஎஸ் 14 கடந்த மாதம் வெளியிடப்பட்டது. மற்ற அப்டேட்களை போன்றே புதிய அப்டேட்டையும் இன்ஸ்டால் செய்ய முடியும். இந்த அப்டேட் ஐபோன் மற்றும் ஐபேட் மாடல்களுக்கு வெளியிடப்பட்டது.

புதிய ஒஎஸ் வெளியான குறுகிய காலக்கட்டத்திற்குள் ஆப்பிள் மற்றொரு அப்டேட்டை .0.1 வெர்ஷனில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இது பொதுப்படை மேம்படுத்தல்களை வழங்குகிறது. பிழை திருத்தங்கள் மட்டுமின்றி சில புதிய அம்சங்களும் வழங்கப்படுகிறது.



சமீபத்திய ஐஒஎஸ் 14 வெர்ஷனில் பலர் பேட்டரி சீக்கிரம் தீர்ந்து போவதாக குற்றஞ்சாட்டினர். பின் ஐஒஎஸ் 14.0.1 வெர்ஷனை ஆப்பிள் வெளியிட்டது. எனினும், இந்த அப்டேட் வெளியான பின்பும் பேட்டரி தீர்ந்து போகும் பிரச்சனை சரியாகவில்லை என பயனர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

பேட்டரி தீர்ந்து போகும் பிரச்சனையை சரி செய்ய பயனர்கள் சாதனத்தை பேக்ட்ரி ரீசெட் செய்ய வேண்டும். வாட்ச் மற்றும் ஐபோன் பயனர்கள் இவ்வாறு செய்ய ஆப்பிள் தனது வலைதளத்தில் கேட்டு கொண்டுள்ளது. சாதனத்தில் உள்ள பிரச்சனையை சரி செய்ய ரீசெட் செய்யக் கோரும் வழக்கம் மிகவும் அரிதான விஷயம் ஆகும்.

பேட்டரி சார்ந்த கோளாறு மிகவும் முக்கியமான ஒன்று என்பதால் பயனர்கள் ரீசெட் செய்வதே நல்ல தீர்வை தரும். எனினும், ஐபோனை ரீசெட் செய்வது சற்றே சிக்கலான காரியம் ஆகும்.
Tags:    

Similar News